13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் வெளியான ஜி.டி.ஏ. 6 – முதல் நாளிலேயே ரூ.21,000 கோடி வருவாய்!
#India
#SriLanka
#America
#Dollar
#LANKA4
Abi
6 hours ago
13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் வெளியான ‘GTA 6’ வீடியோ கேம், உலகளவில் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான முதல் நாளிலேயே 2.45 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, சுமார் 2.36 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியுள்ளதாகச் சந்தை ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் மதிப்பிட்டுள்ளது.
இது இலங்கை ரூபாய் மதிப்பில் அல்ல, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 21,000 கோடியாகும். இதன் மூலம், வரலாற்றிலேயே மிகப்பெரிய பொழுதுபோக்கு வெளியீடாக GTA 6 உருவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான GTA 5, இதுவரை 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.