டெங்கு, சட்டவிரோத குப்பை வீச்சுக்கு எதிராக நாளை முதல் அதிரடி நடவடிக்கை!

#Police #LANKA4 #report #Dengue
Abi
6 hours ago
டெங்கு, சட்டவிரோத குப்பை வீச்சுக்கு எதிராக நாளை முதல் அதிரடி நடவடிக்கை!

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைப் பேணுதல் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக நாளை (21) முதல் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காகப் பல்வேறு அரச நிறுவனங்கள் இணைந்து செயற்படவுள்ளதுடன், அனைத்துக் காவல் நிலையங்களும் சுற்றாடல் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை டெங்கு ஒழிப்பு விதிமுறைகளை மீறிய 10,548 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 15,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டிய 1,197 பேருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!