வடமாகாணத்தில் காற்று மாசு அதிகரிப்பு! – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

#SriLanka #Kilinochchi #LANKA4 #pollution #Face_Mask
Abi
6 hours ago
வடமாகாணத்தில் காற்று மாசு அதிகரிப்பு! – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகப் பணிப்பாளர் P. துவாரகன், இன்று (20) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ‘டீமாக்கா’ காற்றுச் சுழற்சி மற்றும் எல்லை கடந்த காற்றோட்டம் காரணமாக அண்டை நாடுகளின் வளி மாசாக்கிகள் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இலங்கையின் வளிமண்டலத்தில் பனிமூட்டம் போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக் குறியீடு 198 ஆகவும், கிளிநொச்சியில் 175 ஆகவும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிலைமை மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடரக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்லும்போது N95 முகக்கவசங்களை அணியுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!