இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு டிசம்பர் 4ஆம் திகதி விசேட சந்திப்பு!
#SriLanka
#Colombo
#America
#LANKA4
#Embassy
#Adviser
Abi
6 hours ago
இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பிரஜைகளுக்காக, எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி விசேட சந்திப்பொன்றை நடத்துவதற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தலைமையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தூதரக அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நவம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.