ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் நான்கு அமைப்புகளுக்கு ஜெர்மனியில் தடை!

#SriLanka #Police #LANKA4 #Ban #Germany #supporters #Hezbollah
Abi
27 minutes ago
ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் நான்கு அமைப்புகளுக்கு ஜெர்மனியில் தடை!

ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதி மற்றும் அமைப்பு ரீதியான ஆதரவு வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நான்கு அமைப்புகளை ஜெர்மனி தடை செய்துள்ளது.

இந்தத் தடையை அமுல்படுத்தும் நடவடிக்கையில் சுமார் 600 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டு, பெர்லின் நகரின் 28 இடங்களில் அதிரடிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, El-Irschad e.V., Al-Qaem e.V., Al-Thaqalyn e.V. மற்றும் Qalam Bildungszentrum UG ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மசூதிகள், அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகள் ஹிஸ்புல்லாவின் பிரசாரக் கருத்துகளைப் பரப்பியதுடன், இளைஞர்கள் மத்தியில் அதன் சித்தாந்தத்தை வளர்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக ஜெர்மன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், அமைப்புகளைக் கலைத்தல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல், இணையதளங்களை முடக்குதல் மற்றும் அவற்றின் அடையாளச் சின்னங்களைப் பொது இடங்களில் பயன்படுத்தத் தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!