இலங்கை – பங்களாதேஷ் உறவை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (18) நடைபெற்றுள்ளது.
பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமாயூன் கபீர் மற்றும் இலங்கைத் தரப்பினருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பங்களாதேஷுக்கு அரசமுறைப் பயணம் மேற்கொள்ளுமாறு அந்நாட்டின் பிரதமர் தாரிக் ரஹ்மான் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், அரசியல், கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு, இலங்கை – பங்களாதேஷ் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய நகர்வாக அமைந்துள்ளது.