சஷி வீரவன்சவுக்கு சிறைத்தண்டனை உறுதி – உடனடியாக விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

#SriLanka #Prison #LANKA4 #Court
Abi
2 hours ago
சஷி வீரவன்சவுக்கு சிறைத்தண்டனை உறுதி – உடனடியாக விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அதனை நிராகரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சஷி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அவரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!