காலநிலை மாற்றம் தொடர்பில் முன்கூட்டிய நடவடிக்கை – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

#SriLanka #Department #President #AnuraKumaraDissanayake #Disaster #discussion
Abi
13 minutes ago
காலநிலை மாற்றம் தொடர்பில் முன்கூட்டிய நடவடிக்கை – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (16) முற்பகல் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மற்றும் அதிக மழை வீழ்ச்சி தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்கணிப்புத் தரவுகளை மேலும் பகுப்பாய்வு செய்து, அவற்றால் ஏற்படக்கூடிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் தொடர்பான முன்கூட்டிய கணிப்பு அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் விநியோகம், மின்சாரம், உணவுத் தேவைகளின் முகாமைத்துவம் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களைப் புதுப்பித்து, நிலையான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த முன்கூட்டிய கணிப்பு அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் அனைத்துத் துறைசார் அதிகாரிகளையும் அழைத்து விரிவான கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!