கல்முனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயைக் காணவில்லை – தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு கணவர் கோரிக்கை!

#SriLanka #Kalmunai #LANKA4 #wife #Public #Missing
Abi
14 minutes ago
கல்முனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயைக் காணவில்லை – தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு கணவர் கோரிக்கை!

கல்முனையைச் சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவரது கணவர் எல். றிலாசன், கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 11.11.2026 அன்று வீட்டை விட்டுச் சென்ற தனது மனைவி இதுவரை வீடு திரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், காணாமல் போன தனது மனைவி இறுதியாக யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இருந்து உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை 2A, 29/2 கடற்கரை வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் கற்பகக்கரசு என்ற 34 வயதுடைய குறித்த பெண்ணுக்கு 14 வயதில் ஒரு மகளும், 10 மற்றும் 6 வயதுகளில் இரு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை!

குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவரைக் கண்டவர்கள் 

கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 071 419 6223

 074 278 1199

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!