19 பேர் பயணிக்கும் மின்சார விமானம் – சீனா வெற்றிகரமாக நடத்திய முதல் மனித சோதனை!

#SriLanka #China #Flight #LANKA4 #AirCraft #Passenger #Electric
Abi
17 minutes ago
19 பேர் பயணிக்கும் மின்சார விமானம் – சீனா வெற்றிகரமாக நடத்திய முதல் மனித சோதனை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில், மனிதர்கள் பங்கேற்ற முதலாவது சோதனைப் பயணத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

சுமார் 10 தொன் எடை கொண்ட இந்த CE-25A மின்சார விமானம், குறுகிய தூர நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்காக 19 இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த விமானம், ஒருமுறை மின்னேற்றம் (Charge) செய்தால் 400 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்திலுள்ள பின்சோ நகரில் இந்தச் சோதனைப் பயணம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமான சோதனைப் பொறியாளர் என மூவர் விமானத்தில் பயணித்துள்ளனர்.

மொத்தம் 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நடைபெற்ற சோதனையில், விமானம் 16 நிமிடங்கள் 38 விநாடிகள் வானில் பறந்து 60.4 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்துள்ளது.

சீன அரசுக்குச் சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான 'கோமாக்', முன்னணி மின்கலத் தயாரிப்பு நிறுவனமான CATL மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த CE-25A மின்சார விமானத்தை உருவாக்கியுள்ளன.

இந்தச் சோதனைப் பயணத்தின்போது விமானத்தின் அனைத்து அமைப்புகளும் துல்லியமாகச் செயல்பட்டதாக கோமாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மனிதர்கள் பயணிக்கும் சோதனைக்கு முன்னதாக இந்த விமானம் 19 தானியங்கி சோதனைப் பயணங்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது.

இந்தச் சாதனையின் மூலம், வணிக ரீதியிலான மின்சார விமானப் போக்குவரத்துத் துறையில் சீனா மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!