‘காட்பாதர்’ என அழைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற போதைப்பொருள் கடத்தல் மன்னன் 80 வயதில் மரணம்!

#Hospital #Treatment #International #drugs
Abi
1 hour ago
‘காட்பாதர்’ என அழைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற போதைப்பொருள் கடத்தல் மன்னன் 80 வயதில் மரணம்!

உலகின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட மெக்சிகோவைச் சேர்ந்த மிகுவல் ஏஞ்சல் பெலிக்ஸ் கல்லார்டோ தனது 80ஆவது வயதில் காலமானார்.

மெக்சிகோவின் குவாதலஹாரா நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் உலகில் 'காட்பாதர்' என அழைக்கப்பட்ட இவர், 1980களில் மெக்சிகோவின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய குவாதலஹாரா கடத்தல் அமைப்பின் தலைவராகச் செயற்பட்டார்.

கொலம்பியாவின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான பப்லோ எஸ்கோபார் தலைமையிலான மெடலின் கடத்தல் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி, தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருளை மெக்சிகோ ஊடாக அமெரிக்காவுக்குக் கடத்தும் வலையமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்

அந்தக் காலப்பகுதியில் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட கொக்கைன் போதைப்பொருளில் சுமார் 80 சதவீதம் மெடலின் அமைப்பிலிருந்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமுலாக்கப் பிரிவின் (DEA) அதிகாரியான என்ரிக் 'கிக்கி' கெமரேனா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கல்லார்டோவுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

இதனைத் தொடர்ந்து, 1989ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதன் பின்னர் அரச காவலில் இருந்து வந்தார்.

இதேவேளை, பின்னர் உலகப் புகழ்பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரராக உருவெடுத்த 'எல் சாப்போ' என அழைக்கப்படும் ஜோக்வின் குஸ்மானும், ஆரம்பத்தில் கல்லார்டோவின் கடத்தல் அமைப்பின் கீழ் பணியாற்றியவர்களில் ஒருவராவார்.

கல்லார்டோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது அமைப்பு பல பிரிவுகளாகச் சிதைவடைந்ததுடன், பின்னர் ஜோக்வின் குஸ்மானின் தலைமையில் சினலோவா போதைப்பொருள் கடத்தல் அமைப்பு வளர்ச்சியடைந்தது.

மேலும், கல்லார்டோவின் வாழ்க்கை வரலாறும் போதைப்பொருள் கடத்தல் பின்னணியும் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பான பிரபல தொலைக்காட்சித் தொடரான 'Narcos: Mexico' ஊடாகச் சித்தரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!