திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறந்து வைப்பு!
#PrimeMinister
#School
#LANKA4
#education
#Harini Amarasooriya
Abi
43 minutes ago
நவம்பர் 15ஆம் திகதி திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் பொருட்டு பாடசாலையின் பழைய கட்டடங்களையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்கான கற்றல் சூழலை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.