இங்கிலாந்தில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்ளும் இந்தியர்

#CourtOrder #Prison #Sexual Abuse #LANKA4 #ENGLAND #L4
Prasu
22 minutes ago
இங்கிலாந்தில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்ளும் இந்தியர்

இங்கிலாந்தில் சமூக வலைதளங்கள் மூலம் சிறார்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 27 வயது இந்திய மாணவர் பிலால் காஜிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிறுவர்கள் பயன்படுத்தும் கேமிங் மற்றும் சமூக ஊடத் தளங்களில் தன்னை ஒரு சிறுவனாக உருமாற்றி கொண்டு, 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை குறிவைத்து அந்தரங்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று, பின்னர் அவற்றைக் காட்டி மிரட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் பிலால் காஜிக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

இங்கிலாந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இவர் சுமார் 180 பேரை தொடர்பு கொண்டுள்ளதும் 28 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!