எதிரியிடம் மண்டியிடாத, துணிச்சலும் போர்க்குணமும் கொண்ட எம்.கே.சிவாஜிலிங்கம் ஜயா

#SriLanka #Death #M K Sivajilingam #LANKA4 #Politician #condolence #ANUTHAPAM #L4
Prasu
43 minutes ago
எதிரியிடம் மண்டியிடாத, துணிச்சலும் போர்க்குணமும் கொண்ட எம்.கே.சிவாஜிலிங்கம் ஜயா

முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும்,வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளருமான M.K.சிவாஜிலிங்கம் ஜயா காலமானார்.

எதிரியிடம் மண்டியிடாத, துணிச்சலும் போர்க்குணமும் கொண்ட நல்லதொரு தமிழ் உணர்வாளரை எங்கள் தமிழீழ தேசம் இன்று இழந்திருக்கின்றது!

சுவாசித்த காற்றெல்லாம் தமிழ்த்தேசிய மூச்சு!

சுமந்திட்ட கொள்கையெல்லாம் சமரசமற்ற எழுச்சி!

ஒரு மனிதனின் வாழ்வு என்பது

அவன் வாழ்ந்த காலத்தால் மட்டும் அளவிடப்படுவதில்லை;

அவன் கொண்ட இலட்சியத்தாலும்,

அவன் எழுப்பிய குரலாலும்,

அவன் பதித்த வரலாற்றுத் தடங்களாலுமே

அது காலத்தைக் கடந்து வாழ்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில்

தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தைப் பதித்தவர்

எம்.கே. சிவாஜிலிங்கம் ஐயா!

தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்ட இடங்களில்

உரத்துக் குரல் கொடுத்தவர்.

மக்களின் வலிகள் பேசப்பட வேண்டிய மேடைகளில்

அவற்றை எடுத்துரைத்தவர்.

உள்ளூர் அரசியல் தளங்கள் முதல்

சர்வதேச அரங்குகள் வரை

தமிழ் மக்களின் அபிலாஷைகளை எடுத்துச் சென்றவர்.

புயலென எதிர்த்தார் அநீதிகளை,

துணிவுடன் எடுத்துரைத்தார் தனது நிலைப்பாடுகளை;

தான் நேசித்த மண்ணின் மீதும்,

தான் சார்ந்த மக்களின் மீதும்

கொண்ட பற்றுதலுடன் பொதுவாழ்வில் பயணித்தவர்.

கொள்கைகள் காலத்தால் அழிவதில்லை...

குரல்கள் காலத்தால் மௌனிப்பதில்லை...

ஒரு தலைமுறையின் அர்ப்பணிப்பு

மறுதலைமுறையின் வரலாறாக மாறுகின்றது!

வீழ்ந்திடாத கொள்கையின் வித்தாக.

வரலாற்றில் பதிந்த அரசியல் சித்திரமாக...

தமிழர் உரிமைப் பயணத்தின்

ஒரு காலத்தின் குரலாக...

உங்கள் பொதுவாழ்வுப் பயணம்

நினைவுகளில் நிலைத்திருக்கும் ஐயா!

ஒரு மனிதரைப் பிரிவது

ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல

அவரோடு தொடர்புபட்ட நினைவுகளையும்,

அவர் பதித்த வரலாற்றுத் தடங்களையும்

மீண்டும் ஒருமுறை நினைவுகூரச் செய்யும் தருணமுமாகும்.

கண்ணீருடன் விடைதரும் இவ்வேளையில்,

அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள்,

நண்பர்கள் மற்றும் அவருடன் பயணித்த

அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும்

அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மனிதர்கள் மறையலாம்...

மண்ணுக்காகச் சுமந்த நினைவுகள் மறைவதில்லை!

காலங்கள் கடக்கலாம்...

வரலாற்றில் பதிந்த தடங்கள் அழிவதில்லை!

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!