மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் குறித்த அறிவிப்பு
#SriLanka
#Death
#M K Sivajilingam
#LANKA4
#Politician
#L4
Prasu
33 minutes ago
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான காலஞ்சென்ற எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை 16ம் திகதி நடைபெறவுள்ளன.
அவரது பூதவுடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, இன்று முதல் வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை நண்பகல் 12:00 மணிக்கு, பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது பூதவுடல் வல்வெட்டித்துறைச் சந்தியில் வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, பூதவுடல் வல்வெட்டித்துறை, ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், வட மாகாண சபை உறுப்பினராகவும், இறுதியாக வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவராகவும் பணியாற்றிய எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று இரவு தனது 69ஆவது வயதில் காலமானார்.