காசாவில் கடும் குளிரால் 9 மாதக் குழந்தை உயிரிழப்பு - சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

#Death #Cold #LANKA4 #Warning #Climate #baby #Gaza #L4
Prasu
18 minutes ago
காசாவில் கடும் குளிரால் 9 மாதக் குழந்தை உயிரிழப்பு - சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

காசா பகுதியில் 9 மாதக் குழந்தை ஒன்று கடும் குளிரின் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு குளிர்காலத்தில், குளிரால் ஏற்பட்ட முதல் மரணமாக இது பதிவாகியுள்ளது. 

உயிரிழந்த குழந்தையின் பெயர் கினான் அகமது அர்கிக் (Kinan Ahmed Arqiq) என கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உடல் வெப்பநிலை மிக மோசமாகக் குறைந்ததன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தக் குழந்தை வியாழக்கிழமை குவைத்தி மருத்துவமனையிலிருந்து நாசர் மருத்துவ வளாகத்திற்கு (Nasser Medical Complex) கொண்டு செல்லப்பட்டபோது, ​​ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

காசாவில் இந்த குளிர்காலத்தில் இதுவரை குளிரின் தாக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை, வெள்ளம் மற்றும் போதிய தங்குமிட வசதிகள் இன்மை போன்ற சூழல்களுக்கு மத்தியில், இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மிகவும் மோசமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!