பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி மற்றும் கத்தார்

#LANKA4 #Turkey #Security #Agreement #Qatar #L4
Prasu
19 minutes ago
பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி மற்றும் கத்தார்

இஸ்தான்புல்லில் துருக்கிய அதிபர் தயீப் எர்டோகனுக்கும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, துருக்கியும் கத்தாரும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

"வளைகுடா பிராந்தியத்தில் போர் மீண்டும் வெடிப்பதைத் தடுக்கவும், பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தை உருவாக்கி அமைதியை நிலைநாட்டவும் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்தார்" என்று துருக்கிய அதிபர் அலுவலகம் 'எக்ஸ்'தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் "துருக்கிக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும்" என்று எர்டோகனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!