தங்கம் விலையில் மீண்டும் அதிரடி வீழ்ச்சி – ஒரே நாளில் 3,000 ரூபா குறைவு!

#SriLanka #prices #LANKA4 #Gold #Market
Abi
15 minutes ago
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி வீழ்ச்சி – ஒரே நாளில் 3,000 ரூபா குறைவு!

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்றும் (13) தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் ஒரு பவுண் தங்கத்தின் விலை 3,000 ரூபாவால் குறைந்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, 22 கரட் தங்கம்: நேற்று 334,000 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 331,200 ரூபாவாகக் குறைந்துள்ளது.

24 கரட் தங்கம்: நேற்று 363,000 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 360,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கிடையில், சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4,100 அமெரிக்க டொலரைக் கடந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, இன்று 3,900 டொலராகச் சரிவடைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!