பிரான்ஸ் மாணவர் போராட்டம் - 448 பேர் கைது
பிரான்சில், வாழ்க்கைச் செலவு உயர்விற்கு எதிரான நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களின் போது, 448 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 53 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 5, பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சுமார் 1.6 மில்லியன் மக்கள் பங்கேற்றதாக சிஜிடி (CGT) தொழிற்சங்கம் மதிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், முன்னதாக 6 லட்சம் பேர் பங்கேற்றதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையை 5 லட்சத்து 75 ஆயிரமாகத் திருத்தி அறிவித்துள்ளது.
இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டங்கள் பல வாரங்களாக நீடித்து வந்த நிலையில், இந்த புதிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு மற்றும் வரிச் சீர்திருத்தங்களைக் கோரியதுடன், சில போராட்டங்களின் மீது காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அதிருப்தி தெரிவித்தன.