யாழ். மக்களுக்காக பாராளுமன்றத்தில் கையேந்தி நின்ற அர்ச்சுனா எம்.பி.!

#SriLanka #Jaffna #Parliament #people #LANKA4
Abi
57 minutes ago
யாழ். மக்களுக்காக பாராளுமன்றத்தில் கையேந்தி நின்ற அர்ச்சுனா எம்.பி.!

பிரௌண்ட் வீதி முதலாம் குறுக்குத் தெரு ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகளை அமைத்துத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வடக்கு மாகாண மக்கள் பாண், பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி செலுத்துகின்ற போதிலும், தமக்கான அடிப்படைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குக் கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டார்.

இதன்போது, “ஒரு தமிழனாக நான் வெட்கப்படுகின்றேன்” எனத் தெரிவித்த அவர், குறித்த ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகளை அமைத்துத் தருமாறு அமைச்சர் சந்திரசேகரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை மற்றும் அவரது முழுமையான உரையை காணொளியில் காணலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!