கூடுதல் எரிபொருளுக்காக ரூ.1.17 மில்லியனை மீளச் செலுத்திய முன்னாள் ஆளுநர்!

#SriLanka #government #LANKA4 #Audit Office
Mahathi
55 minutes ago
கூடுதல் எரிபொருளுக்காக ரூ.1.17 மில்லியனை மீளச் செலுத்திய முன்னாள் ஆளுநர்!

அரச சுற்றறிக்கைகள் மற்றும் விதிமுறைகளை மீறி பயன்படுத்திய 11,320 லீற்றர் கூடுதல் எரிபொருளுக்கான 1.17 மில்லியன் ரூபாவை, வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் மீளச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தணிக்கை அலுவலகத்தின் விசாரணையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, குறித்த தொகையை முழுமையாக ரொக்கமாக மாகாண சபை நிதியத்தில் அவர் வைப்புச் செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் முதல் 2021 ஜூன் வரையான காலப்பகுதியில் அரச சுற்றறிக்கைகளுக்கு முரணாகக் கூடுதல் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தணிக்கை விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த முறைகேட்டிற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தணிக்கை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது ஓய்வுபெற்றுள்ளதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுவதாக மாகாண சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!