திருமண மண்டபத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Police
#Investigation
#LANKA4
Mahathi
1 hour ago
ஹோமாகம – கொடகம பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமண மண்டபத்திற்குள் ஆரம்பித்த தகராறு, பின்னர் மண்டபத்திற்கு வெளியே மோதலாக உருவெடுத்துள்ளது.
இதன்போது காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.