2027 முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம் – புதிய நேர அட்டவணை அறிமுகம்!

#SriLanka #School #government #LANKA4 #students #education
Mahathi
1 hour ago
2027 முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம் – புதிய நேர அட்டவணை அறிமுகம்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் கற்றல் நேரங்களைத் தரங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, புதிய பாடசாலை நேர அட்டவணை தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய நேர அட்டவணையின்படி,

  • தரம் 1 மற்றும் 2: காலை 7.30 முதல் முற்பகல் 11.45 வரை.
  • தரம் 3 மற்றும் 4: காலை 7.30 முதல் பிற்பகல் 1.00 வரை.
  • தரம் 5 முதல் உயர்தரம் வரை: காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை.

இதேவேளை, புதிய பாடத்திட்டங்கள் அடுத்த ஆண்டு தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், கல்விச் சீர்திருத்தங்கள் படிப்படியாக ஏனைய தரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

மேலும், புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்களை 2030ஆம் ஆண்டு சாதாரண தரத்திற்கும், 2033ஆம் ஆண்டு உயர்தரத்திற்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!