இளைஞர்களின் குரலைப் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய புதிய நடவடிக்கை!

#SriLanka #Batticaloa #Parliament #government #Minister #LANKA4 #Gampaha
Abi
1 hour ago
இளைஞர்களின் குரலைப் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய புதிய நடவடிக்கை!

இளைஞர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் தீர்வுப் பரிந்துரைகளைப் பாராளுமன்றத்தின் ஊடாகக் கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தின் திறந்த ஆட்சிமுறை முன்முயற்சிக்கான குழுவின் இணைத் தலைவரும், அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவும் இணைந்து, இளைஞர்களின் பங்கேற்பை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் அண்மையில் பங்கேற்றுள்ளனர்.

“குரலிலிருந்து கொள்கைக்கு” (Voice to Policy) என்ற தொனிப்பொருளில் கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைகளில் இளைஞர்கள் தமது பிரச்சினைகள் மற்றும் தீர்வுப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

 இக்கருத்துகளைப் பாராளுமன்றக் குழுக்களிடம் கொண்டு செல்வதுடன், இளைஞர் பிரதிநிதிகள் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தமது முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இந்த முயற்சியில் CII (Coalition for Inclusive Impact) மற்றும் NDI (National Democratic Institute) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

இளைஞர்களின் கருத்துகள் வெறுமனே கலந்துரையாடல்களுடன் முடிவடையாமல், அவை கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் பரிசீலிக்கப்படுவதன் மூலம் திறந்த ஆட்சிமுறையையும் ஜனநாயகப் பங்கேற்பையும் வலுப்படுத்த முடியும் என இந்த முயற்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!