திடீரென வெளியேறிய சிறப்பு அதிரடிப்படையினர்.!

#SriLanka #Jaffna #government #LANKA4 #Camp #East
Abi
2 hours ago
திடீரென வெளியேறிய சிறப்பு அதிரடிப்படையினர்.!

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு நடுக்குடத்தனை பகுதியில் பொதுநோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீரென அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும், முகாம் அமைந்திருந்த காலப்பகுதியிலும் நாளாந்தம் நான்குக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதியில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சிறப்பு அதிரடிப்படையினர் முகாமிலிருந்து வெளியேறியுள்ளமை அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. முகாம் அகற்றப்பட்டமைக்கான காரணம் மற்றும் அப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த இனிவரும் காலங்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!