தென்கொரியாவில் நீண்டகால வசிப்பிட உரிமை மற்றும் வேலைவாய்ப்பு - ஒப்பந்தம் கைச்சாத்து!

#SriLanka #Job Vacancy #LANKA4 #SouthKorea #education #Deal
Thamilini
1 hour ago
தென்கொரியாவில் நீண்டகால வசிப்பிட உரிமை மற்றும் வேலைவாய்ப்பு - ஒப்பந்தம் கைச்சாத்து!

தென்கொரியாவில் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் நீண்டகால வசிப்பிட உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தேசிய தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இலங்கை மாணவர்கள், தென்கொரியாவின் சங்ஷின் பல்கலைக்கழகத்தில் (Changshin University) உயர்கல்வியைத் தொடர முடியும்.

இத்திட்டம் தென்கொரியாவின் கியோங்சாங்னம்-டோ (Gyeongsangnam-do) மாகாணத்தில் உள்ள தொழிற்துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, அந்த மாநிலத்தில் நீண்டகால வசிப்பிட உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!