இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம்!

#SriLanka #LANKA4 #Turkey #Agreement #Deal
Thamilini
1 hour ago
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம்!

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும், சிவில் விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில், தற்போதுள்ள விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தைத் திருத்தும் ஆவணம் கையொப்பமிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இவ் ஒப்பந்தம் நேற்று (27) துருக்கியின் அங்காராவில், இலங்கையின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருணா ஹேமச்சந்திரா மற்றும் துருக்கியின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர்  என்வர் இஸ்கர்ட் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டது. 

 இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும். 

இது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்கள்-மக்களுக்கு இடையேயான உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதுள்ள கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் இரு அரசாங்கங்களின் அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம்  அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!