கிராண்ட்பாஸில் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து விழந்து சிறுமி உயிரிழப்பு!
#SriLanka
#Colombo
#Police
#Investigation
#LANKA4
Thamilini
1 hour ago
கொழும்பு -கிராண்ட்பாஸில் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (27) மாலை நிகழ்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுமி, லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமி, கிராண்ட்பாஸைச் சேர்ந்த 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸாார் ஆரம்பத்தள்ளனர்.