ஏர்பஸ் விமானக் கொள்வனவு மோசடி : நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
#SriLanka
#Parliament
#Namal Rajapaksha
#Court
#Airbus
Thamilini
1 hour ago
ஏர்பஸ் விமானக் கொள்வனவு மோசடி வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்றைய தினம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார,கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசரின் அனுமதியுடன், நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகளும் 59 சாட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பில் பணமோசடி மற்றும் 10 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.