இலங்கையில் உலக பௌத்த சங்கத்தின் 60ஆவது ஆண்டு விழா: ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

#SriLanka #AnuraKumaraDissanayake #Anniversary #discussion #Buddhist
Abi
1 hour ago
இலங்கையில் உலக பௌத்த சங்கத்தின் 60ஆவது ஆண்டு விழா: ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

இலங்கையில் நடைபெறவுள்ள உலக பௌத்த சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

உலக பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வணக்கத்திற்குரிய போதாகம சந்திம தேரர், பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய மைத்திப்பே விமலசார மகாநாயக்க தேரர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி களனி நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகி, டிசம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகின் பல்வேறு பௌத்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 600க்கும் மேற்பட்ட பிக்குகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர், வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 250 இலங்கையர்கள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 250 பிக்குகள் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!