மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – தமிழரசுக் கட்சி வலியுறுத்தல்

#SriLanka #M. A. Sumanthiran #LANKA4 #Legal #provincial council election
Abi
1 hour ago
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – தமிழரசுக் கட்சி வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலைத் தாமதமின்றி நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதை காரணமாகக் கொண்டு தேர்தலைப் பிற்போட முடியாது எனக் கட்சி தெரிவித்துள்ளது.

முதலில் தேர்தலை நடத்திவிட்டு, அடுத்த தேர்தலுக்கு முன்னர் தேவையான சட்டத் திருத்தங்களையும் எல்லை நிர்ணய மாற்றங்களையும் மேற்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான தெரிவுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இந்த நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார். குறித்த கூட்டத்தில் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்குதல் மற்றும் அவற்றுக்கான எல்லைகளை நிர்ணயித்தல் போன்ற நடவடிக்கைகள் நீண்டகாலம் எடுக்கக்கூடியவை என்பதால், அவற்றைத் தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துவது தேர்தலை மேலும் தாமதப்படுத்தும் எனக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட வழிமுறைகள் தொடர்பான ஆவணங்களும் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்குவதற்கும் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!