பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்பு!

#SriLanka #PrimeMinister #government #LANKA4 #money #Harini Amarasooriya
Abi
2 hours ago
பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்பு!

பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பரவலாக்கத்திற்கு நிதியுதவி வழங்குதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச பங்காளிகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதுடன், உருவாகிவரும் நிதியியல் அபாயங்களைக் கையாள்வதற்கும் மதிப்பீட்டுக் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் ஒக்டோபர் 26ஆம் திகதி, பணமோசடி தொடர்பான ஆசிய பசிபிக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு பணமோசடித் தடுப்பு, பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஆயுதப் பரவலாக்கத்திற்கான நிதியுதவியைத் தடுத்தல் ஆகிய விடயங்களை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!