செம்மணி தொடர்பில் ராஜ் சோமதேவவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை நிராகரிக்கிறோம் - கஜேந்திரகுமார்!

#SriLanka #Jaffna #Gajendrakumar Ponnambalam #LANKA4 #Court #Semmani human burial
Thamilini
2 hours ago
செம்மணி தொடர்பில்  ராஜ் சோமதேவவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை நிராகரிக்கிறோம் - கஜேந்திரகுமார்!

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மீதான பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பகத்தன்மையை அவராகவே இல்லாமல் செய்திருக்கும் சூழ்நிலையில், இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புடைய விவகாரங்களில் அவரது பங்கேற்பு உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி விவகாரத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் கடந்தகால செயற்பாடுகளின் நியாயபூர்வத்தன்மை குறித்தும் சந்தேகிக்கவேண்டிய நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ கடந்த திங்டக்கிழமை யாழப்பாண மேல் நீதிமன்றத்தில் செம்மணி மணித புதைக்குழி குறித்த அறிக்கையொன்றை தாக்கல் செய்திருந்தார். 

குறித்த அறிக்கையில், செம்மணியில் உயிரிழந்தவர்களின் உயர்வான எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது அவை தொற்றுநோயினாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் கேள்வி எழுவதாகவும், அங்கு உயிரிழந்தோரின் தனிப்பட்ட உடைமைகளைச் சேர்த்துப் புதைப்பதை விடவும், அவர்களது உடல்களை விரைவாக அடக்கம் செய்வதே பிரதான கரிசனைக்குரிய விடயமாக இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கஜேந்திரகுமார். குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். 

குறிப்பாக இந்த அறிக்கையில் செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் ஆடைகள் கண்டறியப்படாமை தொடர்பில், அவை மண்ணின் தன்மை மற்றும் ஏனைய புறச்சூழல் காரணிகளுக்கு ஏற்ப உக்கலடைந்திருக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் இதற்கு முந்தைய அறிக்கைகளில், செம்மணியில் கண்டறியப்படும் உடல்கள் ஆடைகளின்றி இருப்பதானது, இந்தச் சூழலில் குற்றம் நிகழ்ந்திருக்கக்கூடுமோ என்ற கேள்வியைத் தோற்றுவிப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினாலும், கடந்த காலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், யாழ்ப்பாணக் கிளையினாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் செம்மணியில் மனிதப் புதைகுழியில் ஆடைகள் கண்டறியப்படாமையானது குற்றம் நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியப்பாடு குறித்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

அவ்வாறிருக்கையில் தற்போது செம்மணியில் கண்டறியப்பட்ட உடல்கள் படுகொலைக் குற்றங்களின் பின்னர் புதைக்கப்பட்டவை அல்ல என்று நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைக்கும் வகையிலேயே பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

 எனவே பேராசிரியர் ராஜ் சோமதேவ மீதான பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பகத்தன்மையை அவராகவே இல்லாமல் செய்திருக்கும் சூழ்நிலையில், இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் அவரது பங்கேற்பு உள்வாங்கப்படக்கூடாது.

 அதுமாத்திரமன்றி இவ்விவகாரத்தில் அவரது கடந்தகால செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகிக்கவேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.

 இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முறையானதொரு சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் இடமளிக்காவிடின், இந்த அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!