கேப்பாபிலவில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு!

#SriLanka #government #Mullaitivu #land
Thamilini
54 minutes ago
கேப்பாபிலவில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட 6.05 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணி விடுவிப்பு நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் முன்னிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் சுஜிபா சிவதாஸிடம், முல்லைத்தீவு இராணுவப் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அவர்களால் காணி விடுவிப்பு ஆவணம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!