நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது? நுரைச்சோலை மின் நிலையத்தின் உற்பத்தி மீள ஆரம்பம்!

#SriLanka #Power #Country #LANKA4 #Generation #Electricity
Abi
3 hours ago
நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது? நுரைச்சோலை மின் நிலையத்தின் உற்பத்தி மீள ஆரம்பம்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்சாரத் துண்டிப்புகள் அமுல்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்றும் (21) நாடளாவிய ரீதியில் மின்சாரத் துண்டிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், நுரைச்சோலை மின் நிலையத்தை நாளை முதல் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதால், மின்சாரத் துண்டிப்புகளைத் தொடர்ந்து அமுல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!