கிளிநொச்சி அறிவியல் நகர வளாகத்தின் அபிவிருத்திக்கு 2027இல் புதிய திட்டங்கள் முன்னெடுப்பு!

#SriLanka #Kilinochchi #Development #District #LANKA4 #University
Abi
4 hours ago
கிளிநொச்சி அறிவியல் நகர வளாகத்தின் அபிவிருத்திக்கு 2027இல் புதிய திட்டங்கள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர வளாகத்தில் விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான புதிய அபிவிருத்தித் திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவது தொடர்பில் விசேட கள விஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் இணைப்பாளரும், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளருமான தோழர் மருகன் மோகன், பொறியாளர்கள் மற்றும் பீடாதிபதிகளுடன் இணைந்து குறித்த வளாகத்தை நேரில் பார்வையிட்டு, அபிவிருத்திப் பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தார்.

இதன்போது, வளாகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உட்புற வீதிகளைச் சீரமைத்தல், கிரிக்கெட் மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான நவீன விளையாட்டு மைதானங்களை அமைத்தல், 400 மீட்டர் ஓடுபாதை மற்றும் நீச்சல் தடாகம் ஆகியவற்றை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பல்கலைக்கழக வளாகத்தின் எதிர்கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு முழுமையான மாஸ்டர் பிளான்களைத் தயாரித்து, அவற்றை முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

இத்திட்டங்களை 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்துடன் இணைத்து முன்னெடுப்பதற்கான திட்டமிடல்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் கள விஜயத்தில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் தோழர் சுஜீவனும் கலந்துகொண்டார்.

கிளிநொச்சியின் கல்வி, விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள், பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்கும், கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!