நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளார் சஞ்சய சமரசிங்க கைது!

#SriLanka #ARREST #Namal Rajapaksha #Bribery Commission
Thamilini
1 hour ago
நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளார் சஞ்சய சமரசிங்க கைது!

 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

 சமீபத்தில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், கல்கிசையில் அமைந்துள்ள சஞ்சய் சமரசிங்கவிற்குச் சொந்தமான இல்லம் ஒன்றில் திடீர் சோதனை நடத்தினர்.

 இந்தச் சோதனையின்போது, ​​அங்கு கண்டெடுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டி (safe) ஒன்றை அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க நேற்றைய தினம் (19)   ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!