அகுறணையில் பல வாகனங்கள் மீது மோதிய சீமெந்து லொறி - நால்வர் பலி!
#SriLanka
#Police
#Accident
#Investigation
#vehicle
Thamilini
1 hour ago
கண்டி – மாத்தளை பிரதான வீதியில், அகுறணை, குருகோடப் பகுதியில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சீமெந்து கலவையை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, சாலையில் சென்ற பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதன் விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தினால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பலர் சிகிச்சைக்காக அகுறணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.