ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி தமிழகத்தில் 10 பெண்கள் பயணம்!

#SriLanka #Tamil Nadu #Women #Travel #LANKA4 #Justice #Eelam #EasternProvince
Abi
1 hour ago
ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி தமிழகத்தில் 10 பெண்கள் பயணம்!

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 10 பெண்கள் தமிழகத்தில் விரிவான சந்திப்புகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாட்டுக்குப் பயணமான இவர்கள், அங்கு 20 நாட்கள் தங்கியிருந்து 48க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து, ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதன்போது, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச்  சந்திப்புகளில் தி.மு.க. முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களைச் சந்தித்துள்ளனர்.

மேலும், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி, புதுச்சேரி அமைச்சர் பெ. ராஜவேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ஞானதாஸ், வி. விக்னேஸ்வரன், மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும் மலேசிய உரிமைக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பலரும் சந்திக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள், புலவர்கள், சட்டத்தரணிகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று பெண்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

திருகோணமலையில் மாநாடு தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தொப்புள்கொடி உறவுப் பயணத்தைத் தொடர்ந்து இலங்கைக்குத் திரும்பிய பெண்கள், கடந்த வாரம் திருகோணமலையில் மாநாடொன்றையும் நடத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!