பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் – ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம் ஆரம்பம்

#SriLanka #Student #President #University #AnuraKumaraDissanayake
Abi
1 hour ago
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் – ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் முதலாவது நிகழ்ச்சித் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி நடத்தப்பட்ட கண் பரிசோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்ட 316 மாணவர்களுக்கு, கடந்த 17ஆம் திகதி இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி நிதியம் மேற்கொண்டு வருகிறது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகளின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு, பிரித்தானியாவின் Stroud Rotary Club மற்றும் Wish Foundation ஆகிய அமைப்புகள் அனுசரணை வழங்குகின்றன.

இந்தத் திட்டத்தின் ஊடாக, மாணவர்களின் பார்வைக் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!