பசில் ராஜபக்ச தொடர்பான விசாரணைகளின் கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பு!

#SriLanka #Basil Rajapaksa #CourtOrder #files
Thamilini
1 hour ago
பசில் ராஜபக்ச தொடர்பான விசாரணைகளின் கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான விசாரணைகளின் கோப்புகள் மற்றும் ஆவணங்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

பசில் ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக அவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பெற முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு, கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டிருந்தார்.

 மேலும், பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் (Interpol) அமைப்பின் 'சிவப்பு அறிவிப்பை' (Red Notice) பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நீதவான் பணித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!