ஞானசார தேரர் விடுதலை விவகாரம் - தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடும் பிக்குகள்
#SriLanka
#Protest
#Gnanasara Thero
#Monk
Thamilini
1 hour ago
வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விகார மகா தேவி பூங்காவில் பிக்குகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
16ஆம் திகதி பிற்பகலில் விகார மகா தேவி பூங்காவிற்கு வந்த பிக்குகள் இந்த சத்தியாகிரகத்தைத் தொடங்கினர். அன்று அவர்கள் அங்கு தற்காலிக கூடாரம் ஒன்றை அமைக்கச் சென்றபோது பொலிஸாருடன் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.