பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி
#SriLanka
#Protest
#Hospital
#LANKA4
#Monk
#L4
Prasu
13 hours ago
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வணக்கத்திற்குரிய பாலங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாலங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை 'சுவ செரிய' அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியே இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.