நிலச்சரிவு அபாயம் - ரயில் சேவைகள் தாமதமாகும் என அறிவிப்பு

#SriLanka #Colombo #Railway #Train #Land_Slide
Thamilini
1 day ago
நிலச்சரிவு அபாயம்  - ரயில் சேவைகள் தாமதமாகும் என அறிவிப்பு

கடிகமுவ (Kadigamuwa) ரயில் நிலையத்திற்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதன்  காரணமாக ரயில் சேவைகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக பொல்கஹவெலவிலிருந்து (Polgahawela) கம்போலை (Gampola) நோக்கிச் செல்லும் ரயில்களும், கம்போலைக்கும் கொழும்பு கோட்டைக்கும் (Colombo Fort) இடையே இயங்கும் ரயில் சேவைகளும் புறப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்டவாளத்தின் மீது விழுந்த மண்ணை அகற்றுவதற்கு ஏற்கனவே தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எஞ்சியிருக்கும் மண்ணை அகற்றும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!