முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை

#SriLanka #ARREST #LANKA4 #release #Bail #L4 #Shiranthi Rajapaksa
Prasu
1 day ago
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை

‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கிலிருந்து நிதியை முறையற்ற வகையில் கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதற்பெண்மணி சிரந்தி ராஜபக்ஷவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் தரப்பு வழக்கறிஞர்களின் சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். பொதரகம், இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்படி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு தனிநபர் பிணைகளின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை 2026 டிசம்பர் 11 அன்று சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்த ஒரு கோடி ரூபாயை, ‘சிரிலிய சவிய’ அமைப்பிற்கு சட்டவிரோதமான முறையில் மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சிரந்தி ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!