எலான் மஸ்கின் அடுத்த படைப்பு - பறக்கும் காரை அறிமுகப்படுத்திய டெஸ்லா

#luxury vehicle #LANKA4 #technology #ElonMusk #L4
Prasu
1 day ago
எலான் மஸ்கின் அடுத்த படைப்பு - பறக்கும் காரை அறிமுகப்படுத்திய டெஸ்லா

உலகளாவிய வாகனத் துறையில் சாதனை படைத்த எலான் மஸ்கின் 'டெஸ்லா' (Tesla) நிறுவனம், தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் தனது டெஸ்லா ‘ரோட்ஸ்டர்’ (Tesla Roadster) என்ற புதிய படைப்பை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மெக்ரிகரில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) சோதனை மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட அறிமுக நிகழ்வில், எலான் மஸ்க் இந்த காரை உலகிற்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

images/content-image/1792169162.jpg

இந்த நிகழ்ச்சியில் டெஸ்லா நிறுவனம் தனது புதிய தலைமுறை ரோட்ஸ்டர் என்ற காற்றில் பறக்கும் திறன் கொண்ட காரின் அதிரடி செயல் விளக்கத்தையும் காட்டியது. 

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து உருவாக்கியுள்ள இந்தக் கார், மணிக்கு 370 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

டெஸ்லா மற்றும் எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ரோட்ஸ்டர் கார், ராக்கெட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் 'கோல்ட்-கேஸ் த்ரஸ்டர்' (Cold-gas thrusters) மற்றும் கம்ப்ரஸ்ட் ஏர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

images/content-image/1792169294.jpg

இந்த பறக்கும் கார் வெறும் 1 நொடிக்கும் குறைவான நேரத்தில் 0 முதல் 60 மைல் (சுமார் 96 கி.மீ) வேகத்தை எட்டிவிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இது உலகிலேயே மிக அதிவேகமாக இயங்கும் காராக இருக்கும். மின்சார வாகன (EV) சந்தையில் இது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!