சட்டத்திற்கு மேலானவர் எவருமில்லை – ஜனாதிபதி அதிரடிக் கருத்து!

#SriLanka #government #Law #LANKA4 #President #AnuraKumaraDissanayake
Abi
3 hours ago
சட்டத்திற்கு மேலானவர் எவருமில்லை – ஜனாதிபதி அதிரடிக் கருத்து!

“ஜனாதிபதியாக எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், நான் செயற்படுவதற்கான அதிகார வரம்புகளையும் நன்கு அறிவேன். எனவே, எனது அதிகார வரம்புகளை ஒருபோதும் மீறிச் செயற்படமாட்டேன்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகளும் தங்களுக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த வரம்புகள் போதுமானதாக இல்லாவிடின், சட்டங்கள் ஊடாக அவற்றை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

“எமக்கு எந்த அவசரமும் இல்லை. எவர்மீதும் வெறுப்போ கோபமோ கிடையாது. மக்கள் எம்மிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பு, அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு வாழும் சமூகமொன்றை உருவாக்குவதாகும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரையிலும், ஜனாதிபதியின் செயலாளர் முதல் கிராம உத்தியோகத்தர் வரையிலும், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையிலும் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எவரும் சட்டத்திற்கு மேலானவராக இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!