யாழில் போதைப்பொருள் கடத்தல் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடி வீடு முடக்கம்!

#SriLanka #Jaffna #Police #drugs #LANKA4 #House
Lakhi
1 hour ago
யாழில் போதைப்பொருள் கடத்தல் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடி வீடு முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இருமாடி வீடொன்றை நிர்மாணித்தமை மற்றும் ஒரு கோடி , 50 இலட்சம் ரூபாய் பணத்தைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குறித்த பணம் மற்றும் இருமாடி வீட்டை நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!