நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 23 வரை மீண்டும் விளக்கமறியல்!

#SriLanka #Colombo #CourtOrder #Namal Rajapaksha #LANKA4 #Remand
Abi
3 hours ago
நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 23 வரை மீண்டும் விளக்கமறியல்!

கிரிஷ் (Krrish) நிறுவன விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜானகி சிறிவர்தன சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதற்கிடையில், நாமல் ராஜபக்ஷவுக்கான பிணை உத்தரவு இன்னும் தயாரிக்கப்படாததால், அது தொடர்பான அறிவிப்பு அடுத்த வழக்கு விசாரணையின்போது வெளியிடப்படும் என கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம தெரிவித்துள்ளார்.

கிரிஷ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!