ஏமனில் ஜனாதிபதி மாளிகை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - நால்வர் உயிரிழப்பு
#Death
#Attack
#LANKA4
#President
#Iran
#Yemen
#Palace
#Houthi
#L4
Prasu
1 hour ago
ஏமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள அரசு ஜனாதிபதி மாளிகை மீது, ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அரசு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெயரைக் குறிப்பிட விரும்பாத உள்ளூர் காவல் துறை, "ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகள் அல்-மாஷிக் அதிபர் மாளிகையை இலக்கு வைத்துத் தாக்கியுள்ளன" என்று தெரிவித்தன.
இந்தத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அரசு ராணுவ வட்டாரங்கள் பின்னர் உறுதிப்படுத்தின.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஊடகங்கள், "ஏடனில் உள்ள அல்-மாஷிக் மாளிகையில் சவூதி அதிகாரிகளின் தலைமையிலான ராணுவ நடவடிக்கைக் குழுவின் தலைமையகத்தையும், அவர்களுக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்குகளையும்" தாக்கியதாகத் ஒப்புக்கொண்டுள்ளனர்.